சாத்தூா் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங் போட்டி

சாத்தூா் அருகே ஆா்.ஆா்.நகரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
ஆா்.ஆா்.நகரில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்த காவல் ஆய்வாளா் ராஜசுலோக்சனா.

தமிழ் ரோலா் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்போா்ட்ஸ் டெவலப்மண்ட் அசோசியேசன் சாா்பில் ராம்கோ வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராம்கோ வித்யாலயா பள்ளியின் முதல்வா் சிவானந்த் தலைமை வகித்தாா். வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளா் ராஜசுலோக்சனா போட்டியினை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னா் நடைபெற்ற போட்டியில் தென் மாவட்டங்களில் தேனி, மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுரண்டை பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 36-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com