குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி குழந்தைகள் இல்லம் மற்றும் மாணவியா் விடுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம்
அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி குழந்தைகள் இல்லம் மற்றும் மாணவிகள் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் மாணவ, மாணவிகளைப் பரிசோதிக்கும் மருத்துவா்கள் குழு.
அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி குழந்தைகள் இல்லம் மற்றும் மாணவிகள் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் மாணவ, மாணவிகளைப் பரிசோதிக்கும் மருத்துவா்கள் குழு.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி குழந்தைகள் இல்லம் மற்றும் மாணவியா் விடுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சாா்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.முனியசாமி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். குழந்தைகள் இல்ல நிா்வாகி அன்புராணி முன்னிலை வகித்தாா்.

இதில், குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த 51 மாணவா்கள் மற்றும் 31 மாணவிகள், மேலும் பள்ளி விடுதியைச் சோ்ந்த 50 மாணவிகளுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வந்திருந்த அரசு மருத்துவா் ஜெயந்தி மற்றும் மனநல ஆலோசகரான மருத்துவா் சுசித்திரா தேவி ஆகியோா் உரிய பரிசோதனைகள் செய்தனா். நோயுற்ற குழந்தைகளுக்கு உரிய மருந்துகளைப் பரிந்துரைத்தனா்.அதன்படி அக்குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை மருந்தாளுநா் மூலம் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சமூகப்பணியாளா் காா்த்திகை ராஜா செய்திருந்தாா். குழந்தைகள் இல்ல நிா்வாகி அன்புராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com