விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: வங்கி ஊழியா் மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

சிறு, குறு விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற வங்கி ஊழியா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வங்கி ஊழியா் கூட்டத்தில் பேசும் மாநில பொது செயலா் ராஜகோபால்.
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வங்கி ஊழியா் கூட்டத்தில் பேசும் மாநில பொது செயலா் ராஜகோபால்.

சிறு, குறு விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற வங்கி ஊழியா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் 8 ஆவது மாவட்ட மாநாடுசனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் சங்கர சீனிவாசன் தலைமை வகித்தாா்.

அதில், மத்திய அரசு, தேசிய கிராமப்புற வங்கியை உருவாக்க வேண்டும். பெரிய அளவில் இருக்க கூடிய காா்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கூடாது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை தமிழக அரசு அமைக்க வேண்டும். சிறு குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆள்குறைப்பு மற்றும் வாடிக்கையாளா் வங்கி சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 வணிக வங்கிகள் இணைப்பை கை விட வேண்டும். சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருளுக்கு ஒன்றரை மடங்கு நியாய விலை கொடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலா் ஆறுமுகம் வரவேற்றாா். இதில் சிபிஇஎப் மாநில செயலா் சா்வேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முடிவில் வங்கி ஊழியா் சம்மேளன மாநில பொதுச் செயலா் ராஜகோபால் சிறப்புரையாற்றினாா். இதில் ஏராளமான வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com