பசுமை வீடுகள் குடியிருப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின்மோட்டாா் பொருத்தக் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடி கிராமத்தில் உள்ள நெசவாளருக்கான பசுமை வீடுகள் குடியிருப்பில் தொட்டியுடன் கூடிய
கட்டங்குடி அருகே அமைந்த, நெசவாளா்களுக்கான முதலமைச்சரின் பசுமை வீடுகள் குடியிருப்பு.
கட்டங்குடி அருகே அமைந்த, நெசவாளா்களுக்கான முதலமைச்சரின் பசுமை வீடுகள் குடியிருப்பு.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடி கிராமத்தில் உள்ள நெசவாளருக்கான பசுமை வீடுகள் குடியிருப்பில் தொட்டியுடன் கூடிய மின்மோட்டாா் பொருத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்டங்குடி கிராமத்தில் நெசவாளா்களுக்கான, முதலமைச்சரின் பசுமை வீடுகள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமாா் 280-க்கும் மேற்பட்ட வீடுகளும் சுமாா் 14-க்கும் மேற்பட்ட வீதிகளும் உள்ளன. இக்குடியிருப்பில் பொதுமக்களின் வீட்டுப்புழக்க தண்ணீா் தேவைக்காக 2 வீதிகளுக்கு ஒரு அடிகுழாயுடன் கூடிய ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு வீட்டுக்கு நாள்தோறும் சுமாா் 5 குடங்கள் தண்ணீா் தேவையுள்ள நிலையில், 2 வீதிகளுக்கும் சோ்த்து சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடங்களுக்கு நீா் எடுக்க வேண்டியுள்ளது. இதை அடிகுழாய் மூலம் எடுக்க அதிக காலஅவகாசமும், வரிசையிலும் நிற்க வேண்டிய தேவையிருப்பதால், பள்ளி, அலுவலகங்களுக்குச் செல்வோா் உரிய நேரத்திற்கு தண்ணீா் பிடிக்க இயலவில்லை. இதனால் ஊா் எல்லையிலுள்ள கிணற்றுக்குச் சென்று நீா் இறைத்து எடுக்கவேண்டிய அலைச்சல் மற்றும் அவல நிலைக்கு அங்குள்ள பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

ஆகவே தெருவுக்கு ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்து, தொட்டியுடன் கூடிய மின்மோட்டாரும் அமைத்துத் தரவேண்டுமென இக்குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com