சாத்தூரில் குடிநீர் குழாயின் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூர் நான்குவழிச்சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டுமென

சாத்தூர் நான்குவழிச்சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி சார்பில் பிரதான சாலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாத்தூர் நான்குவழிச்சாலைக்கு அடுத்துள்ள காமராஜபுரம் முதல் தெரு, இரண்டாவது, மூன்றாவது தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் நான்குவழிச்சாலையின் நடுவிலும்,  ஓரத்திலும் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், குடிநீர் நிறம் மாறி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த குடிநீர் குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகத்தினர் விரைவில் சரி செய்ய வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நான்குவழிச்சாலையில் ஏற்பட்ட இந்த குழாய் உடைப்பால் சாலையில் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி இந்த பள்ளம் மூடப்பட்டு, அதிகளவில் விபத்து ஏற்படுகின்றன. எனவே பெரும் விபத்து நிகழும் முன்னர் நகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும்,  வாகன ஓட்டிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: நான்குவழிச்சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சாலையை தோண்ட அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி வழங்கவில்லை. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த குழாய் உடைப்பை சரி செய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: சாத்தூர் நான்குவழிச்சாலை வழியே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகாரட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
மேலும் இந்த உடைப்பு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நகராட்சியில் கேட்டால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.  நெடுஞ்சாலைத் துறையினரோ நகராட்சி சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதியும், சாலையில் வீணாகும் தண்ணீரை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com