சாத்தூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

சாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்துக்கு

சாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் உடனே அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் நகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச் சாலையில் வங்கிகள், பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள், தனியார் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன. 
இந்நிலையில் இந்த சாலையை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக விரிவாக்கம் செய்யவில்லை. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இச் சாலை இரு வழிப்பாதையாக பிரிக்கப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் பேருந்துகள் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும், சாலையில் நடந்து செல்வோருக்கும் அதிக இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து இருபுறமும் புதிது புதிதாக சிறுகடைகள் அதிக  அளவில் வைக்கப்படுகின்றன. இதை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்  கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் கடை வியாபாரிகளும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை விரிவுப்படுத்தி வருகின்றனர். இதனால் இச் சாலையில் அவசர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் சந்தைப் பகுதியில்தான் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் நடைபாதைக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்களும் இப் பகுதியில் அதிகமாக வைக்கப்படுகின்றன. எனவே சாத்தூர் பிரதான சாலையை விரிவுபடுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள்: இந்நிலையில் நகராட்சி பகுதிக்குள்பட்ட 24 வார்டுகளில் உள்ள தெருக்களில் ஏராளமான சிறுகடைகள் மற்றும் கட்டடங்கள் ஆகியன விதிமுறையை மீறி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் நடந்து செல்லக் கூட முடியாத நிலை காணப்படுகிறது. எனவே சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com