பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 05th January 2019 02:01 AM | Last Updated : 05th January 2019 02:01 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், காமராஜர் பொறியியல் கல்லூரி, சேது பொறியியல் கல்லூரி, நேஷனல் பொறியியல் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். சென்னை சீட்டஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜீஸ் நிறுவன மனிதவள அதிகாரிகள் ஸ்டெபி, சுஜல், பிரவீண் மற்றும் விக்னேஷ் ஆகியோர், மாணவர்களுக்கான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரிச் செயலர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, முதல்வர் சிவக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு அலுவலர் குணாளன் செய்திருந்தார்.