விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி வட்டாரம் மாயலேரி ஆதித்தனேந்தல் கிராம  விவசாயிகள்குழு உறுப்பினர்களுக்கான


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி வட்டாரம் மாயலேரி ஆதித்தனேந்தல் கிராம  விவசாயிகள்குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த கூட்டுப் பண்ணையத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வி.செல்வராஜ் தலைமை வகித்தார். வேளாண் ஆலோசகர் எஸ்.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கான குழு அமைத்தல், உறுப்பினர்கள் தேர்வு செய்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல் மற்றும் கூட்டம் நடத்துதல் ஆகியவற்றை விளக்கினார்.
 திருச்சுழி ஸ்பீச் என்ஜிஓ தொண்டு நிறுவன முதுநிலை மேலாளர் ஆர்.பிச்சை மற்றும் என்ஜிஓ பிரதிநிதிகள் நாகேந்திரன், வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு குழு செயல்பாடு, வங்கியில் கடன் பெறுதல், சங்கம் பதிவு செய்தல் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். 
 விவசாயிகளுக்கு உழவன் செயலியைப்  பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அதன்மூலம் விவசாய இடுபொருள்கள், வேளாண் கருவிகள் பதிவு செய்தல், மானியத் திட்டங்களை அறிந்து கொள்ளுதல் பற்றி அறிவுறுத்தப்பட்டன.
  மேலும் இப்பயிற்சியில் கூட்டுப்பண்ணையம் பற்றி ஒளி, ஒலி காட்சியும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. 
 அத்துடன் விவசாயிகள் பங்கேற்புடன் கூடிய திட்டமிடல் பயிற்சியும் நடத்தப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர் முத்துவேல், அறுவடை, விளைபொருள்கள் சேமிப்பு, விற்பனை வசதி , ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்குக் கொண்டு சென்று இருப்பு வைத்து விற்பனை செய்தல் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
 வேளாண் அலுவலர்கள் ஜெயச்சந்திரா மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் பார்வதி, சிவக்குமார் சின்னமணி, துணைவேளாண் அலுவலர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பு விளக்கமளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com