ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் தேருக்கு பூஜை
By DIN | Published On : 14th June 2019 07:55 AM | Last Updated : 14th June 2019 07:55 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஆண்டாள் பிறந்த தினமான பூர நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, இந்தாண்டு ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வருகிறது. அன்று, மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக, தேருக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அதிகாலை திருக்கோயில் அர்ச்சகர் ரகு பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர்.
இதில், கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், நிர்வாக அலுவலர் இளங்கோவன் உள்பட பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.