தொடர் வழிப்பறி: கமுதி இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

அருப்புக்கோட்டை பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கமுதியைச் சேர்ந்த இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


அருப்புக்கோட்டை பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கமுதியைச் சேர்ந்த இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 
அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த முத்து ஐயப்பன் மகன் பத்மாஸ்வரன் (21) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துள்ளார். இது தொடர்பாக காளிமுத்து அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் பத்மாஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். 
இந்நிலையில், இவர் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மு.ராஜராஜன், மாவட்ட ஆட்சியர் 
அ.சிவஞானத்திற்கு பரிந்துரை செய்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்சியர் உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை பத்மாஸ்ரனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com