சிவகாசி மகளிர் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி
By DIN | Published On : 18th June 2019 07:24 AM | Last Updated : 18th June 2019 07:24 AM | அ+அ அ- |

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் எஸ்.கதிரவன், பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேசியதாவது:
பேராசிரியர்கள் இணையதளம் மூலம் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு பாடங்களை நடத்த வேண்டும். ஒரு பேராசிரியருக்கு சமுதாயத்தை உயர்த்தும் பணியிலும், புதிய சாதனையாளர்களை உருவாக்குவதிலும் பெரும் பங்கு உள்ளது. வகுப்பறைகளில் பாடங்களோடு, வாழ்க்கை முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். முன்னதாக பேராசிரியைகள் ஆர்.சுதாபெரியதாய் வரவேற்றார். எம்.கவிதா நன்றி கூறினார்.