விருதுநகர் வால சுப்பிரமணிய நாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி
By DIN | Published On : 04th March 2019 07:31 AM | Last Updated : 04th March 2019 07:31 AM | அ+அ அ- |

விருதுநகர் வாலசுப்பிரமணிய நாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
விருதுநகர் வால சுப்பிரமணிய நாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு கடந்த 4 நாள்களாக சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு சிவசகஸ்ர நாம ஜெய அர்ச்சனை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்நிலையில், விருதுநகர், மதுரை பகுதியை சேர்ந்த 70 மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. சிவபெருமானுக்காக நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். இதில் கடந்த 4 நாள்களாக சிவனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
திங்கள் கிழமை சிவராத்திரியை முன்னிட்டு சிவநாமம் எழுதும் போட்டி மற்றும் சொல்லரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.