சாத்தூரில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக,  திமுக வேட்பாளர்கள் திங்கள்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக,  திமுக வேட்பாளர்கள் திங்கள்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்துவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பால்வளத்துறை அமைச்சர்  கே.டி. ராஜேந்திரபாலாஜி  மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுபோல  திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசன் சாத்தூர் 
கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்துவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com