ஸ்ரீவிலி. அருகே விபத்து பொறியியல் கல்லூரி மாணவர் பலி
By DIN | Published On : 15th May 2019 07:00 AM | Last Updated : 15th May 2019 07:00 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர், தவறி விழுந்து உயிரிழந்தார்.
சிவகாசி அருகேயுள்ள வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஹரிபிரசாத் (20). தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை கல்லூரி நண்பரின் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நண்பரை பார்க்கச் சென்றாராம்.
திருமங்கலம்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மூவரைவென்றான் அருகே உள்ள சாலை திருப்பத்தில் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் ஹரிபிரசாத் சிறிது தூரம் இழுத்து வரப்பட்டு, எதிரே வந்த ஓட்டுநர் பயிற்சி வாகனத்தில் மோதி உயிரிழந்தார். இது குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.