சிவகாசியில் மதுபானக் கடை ஊழியரை தாக்கியதாக 5 பேர் கைது
By DIN | Published On : 16th May 2019 07:05 AM | Last Updated : 16th May 2019 07:05 AM | அ+அ அ- |

சிவகாசியில் அரசு மதுபானக் கடை ஊழியரை தாக்கியதாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி - செங்கமலப்பட்டி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் திருத்தங்கல் ஆலாஊருணிப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (29) வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு மது அருந்த வந்த கருப்பசாமி (23), அரவிந்தன் (22), வைரமுத்து (24), சங்கர் (20), முத்துப்பாண்டி (23) ஆகிய 5 பேரும் மது அருந்திவிட்டு, ஒருவருக்கு ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது மாரியப்பன் இங்கு தகராறு செய்யக்கூடாது எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மதுபாட்டிலால் அவரை தாக்கினார்களாம். இதில் காயமடைந்த மாரியப்பன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி, அரவிந்தன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.