மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதம்
By DIN | Published On : 16th May 2019 07:03 AM | Last Updated : 16th May 2019 07:03 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே புதன்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதமடைந்தது.
சிவகாசி அருகே மாரனேரியில் ஜெய்சங்கர் (55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்நிலையில் சிவகாசிப் பகுதியில் இடி மின்னலுடன் புதன்கிழமை மாலை மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் பட்டாசு மற்றும் வேதியியல் பொருள்கள் வைத்திருந்த அறையில் மின்னல் தாக்கியதில், அந்த அறை எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் ஊழியர்கள் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.