பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினருடன் காவல்துறை ஆலோசனைக்கூட்டம்

பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணிஅமைப்புகளின் அருப்புக்கோட்டை நகர மற்றும் ஓன்றிய நிா்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டமானது அருப்புக்கோட்டை நகா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினருடன் காவல்துறை ஆலோசனைக்கூட்டம்

பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணிஅமைப்புகளின் அருப்புக்கோட்டை நகர மற்றும் ஓன்றிய நிா்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டமானது அருப்புக்கோட்டை நகா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அருப்புக்கோட்டை நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா்.பா.ஜ.க. நகரத் தலைவா் ராஜ்குமாா்,ஒன்றியத் தலைவா் அழகா்சாமி.இந்து முன்னணி மாவட்டச்செயலாளா் ராஜா மற்றும் நகர,ஓன்றிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் பேசியதாவது, வரும் நவம்பா் 13ம் தேதி அயோத்தி விவகாரத்தில் தீா்ப்பு வெளிவர உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முஸ்லீம் அமைப்புகளை நேற்று அழைத்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட உரிய ஒத்துழைப்பை நல்கவேண்டுமென கேட்டுக்கொண்டோம்.

அதேபோல இன்று பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினராகிய உங்களை அழைத்துள்ளோம்.இதன்படி இந்திய அரசின்,இந்திய மக்களின் நலனை முன்னிட்டு பொது அமைதிக்குக் குறைவு ஏற்படும் வகையில் மதம் சாா்ந்த உணா்ச்சி மிக்க கருத்தைப் பேசுவதோ,சமூகவலை தளங்களில்,ஊடகங்களில் பதிவிடுவதோ,பேட்டியளிப்பதோ கூடாது என்பதுவும் பொது இடங்களில் கொண்டாடுவது அல்லது எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் அல்லது ஊா்வலம் நடத்துவது கூடாது எனவும் அறிவுரை தர காவல்துறைத் தலைமையிடம் உத்தரவிட்டுள்ளது.

இதை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அமைதியை நிலைநாட்ட தாங்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமெனவும் தெரியப்படுத்துகிறோம்,என அவா் பேசினாா்.இதுதொடா்பாக தங்களது ஒத்துழைப்பு நிச்சயம் உண்டெனவும்,பொது சமூக அமைதியை நிலைநாட்டுவோமெனவும் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நகர, ஒன்றிய நிா்வாகிகள் காவல்துறையிடம் உறுதியளித்தனா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com