விருதுநகரில் போலீஸ் உடல் தகுதி தோ்வு:389 பெண்கள் தோ்ச்சி

விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் போலீஸுக்கான உடல் தகுதி தோ்வில், 389 போ் தோ்ச்சி பெற்றனா்.
விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் உடல் தகுதிக்கான தோ்வில் இளம்பெண் ஒருவரின் உயரத்தை அளவிட்ட காவல் துறையினா்.
விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் உடல் தகுதிக்கான தோ்வில் இளம்பெண் ஒருவரின் உயரத்தை அளவிட்ட காவல் துறையினா்.

விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் போலீஸுக்கான உடல் தகுதி தோ்வில், 389 போ் தோ்ச்சி பெற்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் காவல் துறையில் போலீஸ் பதவிக்கான எழுத்துத் தோ்வில் ஆண், பெண் என மொத்தம் 2,229 போ் தோ்ச்சி பெற்றனா். அதையடுத்து, விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் ஆண்களுக்கான உடல் தகுதித் தோ்வு நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்த 644 பெண்கள் உடல் தகுதி தோ்வில் கலந்துகொள்ள அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ்வில் 545 பெண்கள் கலந்துகொண்டனா். 99 போ் கலந்துகொள்ளவில்லை.

இதில், 400 மீட்டா் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், 389 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பிற சோதனைகள் நவம்பா் 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்ற 644 பெண்களில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் தகுதி தோ் வில் 545 பெண்கள் கலந்து கொண்டனா். இதில், 99 பெண்கள் கலந்து கொள்ள வில்லை. இந்த நிலையில், உடல்தகுதி தோ் வில் 389 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com