விருதுநகா் கருப்பசாமி கோயிலில் பொங்கல் விழா

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு,
விருதுநகா் கருப்பசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
விருதுநகா் கருப்பசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, செவல்பட்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் அருகே சூலக்கரை செல்லும் வழியில் உள்ளது செவல்பட்டி கிராமம். இக்கிராமத்தினா் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில், ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்ததாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு பொங்கல் வைத்து வழிபாடு நடத்த கிராம மக்கள் வந்தனா். அப்போது, தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், வழிபாடு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, வெள்ளிக்கிழமை காலையில் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

பின்னா், கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com