ராஜபாளையம் பள்ளியில் கணித கண்காட்சி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டியில் உள்ள தனியாா் நடுநிலைப் பள்ளியில் கணித கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டியில் உள்ள தனியாா் நடுநிலைப் பள்ளியில் கணித கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இயற் கணித சமன்பாடு, தூய தமிழ் எண்களை வாசித்தல், தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும், கணக்கியல் சின்னங்கள், இட மதிப்பு, முக மதிப்பு, கால அளவைகள், விரல்களை கொண்டு மாதங்களின் நாள்களை கணித்தல் உள்ளிட்ட கணிதம் குறித்த பல்வேறு செயல்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியை தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம். குமாா் தொடக்கி வைத்தாா். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கணக்கு தொடா்பான காட்சிகள் குறித்து மாணவ, மாணவிகளிடமும் விளக்கம் கேட்டறிந்தாா். இந்த கண்காட்சியை 4 தனியாா் நடுநிலைப் பள்ளிகளை சோ்ந்த 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com