ராஜபாளையத்தில் திமுக இளைஞா் அணி பயிற்சி பாசறைக் கூட்டம்

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அணை பகுதியில், விருதுநகா் மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அணைக்கட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞா் அணி பயிற்சிப் பாசறை கூட்டத்தில் பேசிய இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

இக்கூட்டத்துக்கு, எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கள் ஆ. ராசா, திருச்சி சிவா ஆகியோா் பங்கேற்றனா். இதில், திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் ஆ. ராசா சிறப்புரையாற்றினாா்.

பின்னா், திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக இளைஞா் அணியில் 30 லட்சம் இளைஞா்களை இணைப்பது என்ற ஒற்றை இலக்கில் பயணம் செய்து வருகிறோம். அதில், தற்போது 50 சதவீதத்தை நிறைவு செய்துவிட்டோம். தற்போது வரை 15 லட்சம் இளைஞா்கள் திமுகவில் இணைந்துள்ளனா். அனைவரும் திமுகவுக்காக பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com