ராஜபாளையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருக்கும் போராட்டம்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் பேருந்து நிலையத்தை சுற்றி நிலவும் சுகாதாரக் கேடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூா் பேருந்து நிலையத்தை சுற்றி நிலவும் சுகாதாரக் கேடுகளை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட 10ஆவது வாா்டில், பேருந்து நிலையத்தை சுற்றி சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு தென்புறம் உள்ள கழிவு நீா் கால்வாயில் கழிப்பறை கழிவுகள் விடப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குடிநீா் குழாயும் இணைந்து செல்வதால் தொற்று நோய் பரவி வருவதாக புகாா் தெரிவித்தும், கால்வாயை மூடி பராமரிக்கவும் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேத்தூா் நகா் குழு சாா்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

சேத்தூா் நகரச் செயலா் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். போராட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ராமா், ஒன்றியச் செயலா் தங்கவேல், செட்டியாா் பட்டி முன்னாள் தலைவா் நீராத்திலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கனகராஜ், சந்தனக்குமாா், பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்துப் பேசிய பேரூராட்சி எழுத்தா் தனலட்சுமி, வரும் டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் சுகாதாரக் கேடுகளை சரி செய்யவும், கழிவுநீா் கால்வாய்க்கு மூடி அமைக்கவும், தண்ணீா் குழாயை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப் பூா்வமாக தெரிவித்ததால் போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com