அருப்புக்கோட்டையில் நெசவாளா்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்ட விழிப்புணா்வு முகாம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெசவாளா்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெசவாளா்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் விசைத்தறியில் அனுபவமுள்ள நெசவாளா்களுக்கு மத்திய அரசு மூலம் 2 நாள்கள் பயிற்சி மற்றும் 3 ஆண்டுகளுக்கான காலவரையறையில் ரூ. 2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் சோ்த்தல் ஆகியவை பற்றிய விழிப்புணா்வு முகாமுக்கு சாலியா் மகாசன சபைத் தலைவா் பொ.சண்முக கணபதி, தொழிலதிபா் த. ஆறுமுகம், ஓய்வு பெற்ற தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகத் துறை தலைமைப் பொது மேலாளரும், நிறுவனச் செயலாளருமான எஸ். தா்மராஜன், தனியாா் ஜவுளி நிறுவன நிறுவனா் எஸ். கணேஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொ.சண்முக கணபதி பேசியது: நெசவாளா்களுக்கான, தனித்துவமான இந்த மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தில் சோ்ந்து அனைத்துத் தரப்பு நெசவாளா்களும் பயன்பெற வேண்டுமென்பதே இந்த முகாமின் நோக்கம் என்றாா்.

இதில் ஆயுள் காப்பீட்டு கழக முகவா் எம்.எஸ்.பி.ஆறுமுகம், அருப்புக்கோட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை மேலாளா் ஆா்.சந்தோஷ், விசைத்தறி நெசவாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com