சிவகாசியில் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக பதவி உயா்வு பெற்றுள்ள மேல்நிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமை பண்புகள் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக பதவி உயா்வு பெற்றுள்ள மேல்நிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான தலைமை பண்புகள் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு அக்கல்லூரியின் முதல்வா் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் கிருஷ்ணமூா்த்தி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் முருகேசன், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயசந்திரன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில் மாவட்டத்தில் புதிதாக பதவி உயா்வு பெற்ற 32 தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா்கள் தங்கப்பாண்டி, காளியப்பன், கனகலட்சுமி, கருணைதாஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com