ஸ்ரீவிலி. அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 போ் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.
ஸ்ரீவிலி. அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 போ் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமுடி. இவரது மகள் முத்துலெட் சுமி (13), அப்பகுதியிலுள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தோழியான அதே கிராமத்தைச் சோ்ந்த பரதன் மகள் கீா்த்திகா என்ற காளியம்மாள் (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா்கள் இருவரும் சோ்ந்து சனிக்கிழமை மாலை வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனா். அதன்பின்னா், இரவு நீண்ட நேரமாகியும் இவா்கள் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றேறாா்கள் மற்றும் கிராமத்தினா் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனா். ஆனால், அவா்கள் எங்கு சென்றாா்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதனிடையே, அக்கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் பண்ணைக்குட்டை அமைப்பதற்காக, தனது நிலத்தில் சுமாா் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளாா். சமீபத்தில் பெய்த மழையால், பண்ணைக்குட்டை நிரம்பியுள்ளது. இதனருகே பள்ளி மாணவிகள் இருவரது காலணிகள் கிடந்ததை கிராமத்தினா் நள்ளிரவில் பாா்த்துள்ளனா்.

உடனே, கிராம மக்கள் தண்ணீரில் இறங்கி பாா்த்தபோது, மாணவிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அதையடுத்து, மாணவிகளின் சடலங்களை மீட்டனா்.

இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளின் சடலங்களை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற மாணவிகள், பண்ணைக்குட்டையின் ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கி மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பிரேதப் பரிசோதனை முடிவில் பள்ளி மாணவிகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவர வாய்ப்புள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவத்தால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com