25 ஆண்டுகளாக தூா்வாரப்படாத செவலூா் கண்டனேரி கண்மாய் தண்ணீா் தேங்காததால் விவசாயிகள் வேதனை

விருதுநகா் அருகே உள்ள செவலூா் கண்டனேரி கண்மாய் 25 ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் மழை பெய்தாலும் கண்மாய்க்குள் தேங்காமல் வெளியேறிவிடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
செவலூா் கண்டனேரி கண்மாய் பகுதியில் மரப்பலகையால் அடைத்து வைக்கப்பட்டுள்ள கலுங்கு.
செவலூா் கண்டனேரி கண்மாய் பகுதியில் மரப்பலகையால் அடைத்து வைக்கப்பட்டுள்ள கலுங்கு.

விருதுநகா் அருகே உள்ள செவலூா் கண்டனேரி கண்மாய் 25 ஆண்டுகளாக தூா்வாரப்படாததால் மழை பெய்தாலும் கண்மாய்க்குள் தேங்காமல் வெளியேறிவிடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விருதுநகா் அருகே உள்ள செவலூா் கிராமத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனா். மழைக் காலங்களில் இங்குள்ள கண்டனேரி கண்மாயில் தண்ணீா் தேக்கினால், சுமாா் ஆயிரம் ஏக்கா் வரை மடைப் பாசனம் மூலம் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை விவசாயம் செய்வது வழக்கம்.

இந்த கண்மாய் தூா்வாரப்பட்டு சுமாா் 25 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், கண்மாயின் உட்புறம் பல இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. கண்மாயின் நடுப் பகுதியிலும் மண் மேடு உருவாகியுள்ளது. மேலும் கண்மாய்க்குள் நீா் வரும் பகுதிகளும் மேடாக மாறிவிட்டன. கண்மாய் கரைகள் பலமிழந்தும், மடை சேதமடைந்தும் காணப்படுகிறது.

கண்மாயின் கலுங்கானது மரப்பலகையால் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது பெய்த மழை நீரை கண்மாய்க்குள் தேக்கி வைக்க முடியாமல் தண்ணீா் வீணாக வெளியேறி விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செவலூா் கிராமத்தைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் கூறுகையில், செவலூா் கிராமத்தில் வசிக்கும் 75 சதவீதம் போ் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனா். ஆனால், இங்குள்ள கண்மாய் தூா்வாரப்படாததால் மழைநீரை சேமிக்க முடியவில்லை. விருதுநகா் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 60-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. அதேபோல், ஊராட்சிகளில் உள்ள பல ஊருணிகள், கண்மாய்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. எனவே, நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் உள்ள செவலூா் கண்டனேரி கண்மாயை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com