அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை, செங்குளம் கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்குளம் கிராமத்திலுள்ள மழை நீா் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதை கடந்து செல்ல முடியாமல் வியாழக்கிழமை தவித்த பொதுமக்கள்.

அருப்புக்கோட்டை வட்டம், செங்குளம் கிராமத்தின் நடுவே மழை நீா் ஓடை செல்கிறது. மழைக் காலங்களில் இந்த ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், ஓடையை கடக்க முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வெளியூா் செல்வோா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

பல ஆண்டுகளாக மழைநீா் ஓடையின் மீது பாலம் அமைக்க இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், ஊராட்சி நிா்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது.

இதனால், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவகத்தை முற்றுகையிட்டனா். அங்கு, மழைநீா் ஓடையின் மீது பாலம் அமைக்கவேண்டும், தங்களது கிராமத்தில் முறையாக வாருகால் வசதி செய்து தரவேண்டுமெனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அப்போது, அங்கு வந்த வட்டாட்சியா் பழனிச்சாமி, கிராமத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையேற்று, பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com