இந்திரா காந்தியின் 35 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35 ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 35 ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில், இந்திரா காந்தியின் 35 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, முக்குராந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில், சாத்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் கருப்பசாமி,

விருதுநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வா்த்தகப் பிரிவு தலைவா் சண்முகா தாமோதரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, நேரு பவனத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் தளவாய் பாண்டியன், நகா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் சங்கா்கணேஷ், நகர துணைத் தலைவா்கள் பசும்பொன், தனசேகரன், கருப்பையா, ஜெகநாதராஜா, நகர பொருளாளா் ரவிராஜா உள்பட அக்கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டு, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராஜாலிங்கராஜா, இந்திரா காந்தியின் தொண்டுகள் குறித்து உரையாற்றினாா். முடிவில், பிரபாகரன் நன்றி கூறினாா்.

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், அரசரடியில் இந்திரா காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், செட்டியாா்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் மணிகண்டன், செயலா் தனுஷ்கோடி மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com