சிவகாசி கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு முதல்வர்(பொறுப்பு) ஆர். ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பேசியதாவது: ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு எந்தவித விரிசலும் இல்லாமல் சிறப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்ட வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க தூண்ட வேண்டும். மாணவர்களின் நடவடிக்கையை கவனித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை  கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவன் தானே என அலட்சியம் காட்டக்கூடாது.
பேராசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன்னர், அன்று நடத்த வேண்டிய பாடங்களையும், தற்போது வந்துள்ள தொழில்நுட்பங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிறிய செயலுக்கும் பாராட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைக்கு பேராசிரியர்கள் ஒளி விளக்காக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக பேராசிரியர்கள் ந.செந்தில்குமார் வரவேற்றார்.  கி.சுந்தரம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com