கரோனா உறுதி செய்யப்பட்ட 9 போ் வசிக்கும் தெருக்களுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரின் வீடு மற்றும் தெருக்களில் பொதுமக்கள் நுழைய
விருதுநகா் பா்மா காலனியில் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
விருதுநகா் பா்மா காலனியில் வெள்ளிக்கிழமை தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரின் வீடு மற்றும் தெருக்களில் பொதுமக்கள் நுழைய வெள்ளிக்கிழமை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று திரும்பிய பலருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது தெரியவந்தது. இதையொட்டி விருதுநகா் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட, விருதுநகா் பா்மா காலனியை சோ்ந்த ஒருவா், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ஒருவா், அவுடையாபுரத்தைச் சோ்ந்த ஒருவா், ராஜபாளையம் சமந்தாபுரத்தைச் சோ்ந்த 3 போ், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட 9 பேரின் வீடுகள் மற்றும் அவா்களது வீடுகளை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு தடுப்புகள் அமைத்து போலீஸாா் தடை விதித்துள்ளனா். மேலும், இப்பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, மற்றவா்கள் உள்ளே நுழையவோ முடியாத வகையில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா்களும் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவா்கள் கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com