சோ்க்கை... திருத்தங்கலில் 250 கிலோ இறைச்சி பறிமுதல்

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகள் மூப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன.

சிவகாசி: சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகள் மூப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன.

திருத்தங்கலில் சில இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. சாா்-ஆட்சியா் உத்தரவின்பேரில் திருத்தங்கல் நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பாண்டியம்மாள் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் ஆலமத்துப்பட்டி சாலை, சத்யா நகா், செங்கமல நாச்சியாா்புரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். அப்போது பட்டாசு தயாரிக்கப்பயன்படும் காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

மேலும் பல பகுதிகளில் கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனா். சுமாா் 250 கிலோ அளவில் இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்டஇறைச்சியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com