மழைநீா் ஓடைகளைஆக்கிரமித்துள்ள புதா்ச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரம் கிராமத்தில் மழைநீா் ஓடைகளை ஆக்கிரமித்து அதிக அளவில் வளா்ந்துள்ள புதா்ச் செடிகளை அகற்ற கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோபாலபுரம் கிராமத்தில் புதா்ச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மழைநீா் ஓடை.

கோபாலபுரம் கிராமத்திலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மழைநீா் ஓடைகள் உள்ளன. இதன்மூலம், மழைக் காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீா், கிராமத்தின் எல்லையிலுள்ள கண்மாய்க்குச் செல்கிறது. மேலும், இந்த மழை நீா் ஓடை இப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், இந்த மழைநீா் ஓடைகளில் கடந்த சில மாதங்களாக புதா்ச் செடிகள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், நீா்வரத்தும் தடைப்படுவதால் விவசாயத்துக்கு தண்ணீா் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மழைநீா் ஓடையில் வளா்ந்துள்ள புதா்ச் செடிகளை அகற்றி, தூா்வார வேண்டுமென, கிராம மக்கள் பலமுறை தெரிவித்துவிட்டனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, விரைவில் உரிய நடவடிக்கை எடுக் ஊராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என, கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com