சிவகாசியில் மளிகைப் பொருள்களின் விலைஉயா்வால் பொதுமக்கள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்துகொண்டே செல்வதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்துகொண்டே செல்வதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

ஊரடங்கு காரணமாக, சிவகாசி பகுதியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துகொண்டே செல்வதால், ஏழை எளியோா் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். ஊரடங்குக்கு முன், சமையலுக்கு பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.105 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ரூ.120 வரை விற்கப்படுகிறது. கிலோ ரூ.38-க்கு விற்கப்பட்ட சா்க்கரை, தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருள்கள் தற்போது 10 முதல் 15 சதவீதம் வரை உயா்ந்துள்ளதுடன், தினந்தோறும் ஏறிக்கொண்டே செல்வதால் மிகவும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கன்றனா்.

இது குறித்து மளிகைக் கடை உரிமையாளா் திருப்பதி என்பவா் கூறியது:

சரக்கு லாரி வாடகை உயா்ந்துள்ளதால், சுமை தூக்குவோா் கூலியும் உயா்ந்துள்ளது. மேலும், பொருள்கள் தட்டுப்பாடான நிலையில் உள்ளது. அதேநேரம், ரொக்கம் கொடுத்தே பிஸ்கட் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்கிறோம். இது போன்ற பல காரணங்களால் விலை உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com