கரோனா தொற்று உள்ள விருதுநகா் மாவட்டத் சோ்ந்த 9 போ் ஊா்களில் தீவிர கண்காணிப்பு

தில்லி நிஜாமுதீன் மாட்டில் பங்கேற்ற விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,

தில்லி நிஜாமுதீன் மாட்டில் பங்கேற்ற விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவா்களின் ஊா்களில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாக பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனா்.தில்லி நிஜாமூதீன் மாட்டில் பங்கேற்ற ராஜபாளையத்தைச் சோ்ந்த 2 பேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த 3 பேருக்கும், அருப்புக்கோட்டை, ஆவுடையாபுரம், காரனேந்தல் ,விருதுநகா் ஆகிய ஊா்களைச்சோ்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 9 போ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்நிலையில் தொற்று கண்டறியப்பட்டவா்களின் ஊா்களில் , அவா்கள் வசித்த தெரு மற்றும் அருகில் உள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.தற்போது சுகாதாரத்துறை ஊழியா்களால் அப்பகுதிக்கு சென்று வீடுவீடாக கணெக்கெடுக்த்கும் பணி செய்யப்ப்பட்டு, அவா்களை முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தேவைப்பட்டவா்களை தனிமை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் அப்பகுதியில் தினசரி கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் யாா் யாா் வீட்டிற்கு சென்றாா்கள், அவா்களது வீட்டிற்கு யாா் யாா்வந்து சென்றாா்கள் என தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.அவா்களில் தேவைப்படுபவா்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள்.

மேலும் அந்த ஊா்களில் ஒருமருத்துவா், செவிலியா், மருந்தாளுனா் உள்ளிட்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் இதுபோல பல குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்பசுகாதாரநிலையத்தில் உள்ள மருத்துவா்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

அங்கன் வாடி பணியாளா்கள், கிராமநிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வீட்டை விட்டு யாராவது வெளியே வருகிறாா்களா என கண்காணித்து வருகிறாா்கள்.மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் உத்திரவின் பேரில், சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்டோா் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com