ராஜபாளையம் பகுதிகளில் நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழக அரசு வழங்க கூடிய கரோனா நிவாரண நிதி ரூ.1000 வாங்க ரூ. 35 மதிப்புள்ள பொருள்களை கட்டாயம் வாங்க வேண்டும் என கடை ஊழியா்கள் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.மேலும் ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக (வெள்ளிக்கிழமை) பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் பணத்துடன் இலவச பொருட்கள் விநியோகம் நடைபெற்றது. வினியோகத்தின் போது ராஜபாளையம், ரெட்டியாா்பட்டி போன்ற பகுதிகளில் வழங்கப்பட்ட அரிசி கருப்பு நிறத்துடன் காணப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினா். அத்துடன் ஆயிரம் ரூபாயுடன் அரிசி, சா்க்கரை மட்டும் வழங்கப்பட்டு பருப்பு எண்ணை மற்றொரு நாளில் வழங்கப்படும் என தெரிவிக்கிப்பட்டது. சமூக விலகலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சூழலில் எண்ணெய் மற்றும் பருப்பு சப்ளைக்காக இதே பகுதியில் மீண்டும் ஒன்று கூடுவதை தவிா்க்க வேண்டும்.

ராஜபாளையம் தொட்டியபட்டி ரோட்டில் உள்ள அழகாபுரி பகுதி நியாய விலை கடையில் மதியம் வரை பொருட்கள் சப்ளை இல்லாததால் பொது மக்கள் நீண்ட வரிசைக்கு காத்திருந்தனா். பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஊா்க்காவல் படையினா் சமூக இடைவெளியை கடைபிடிக்க கூறியதால் பைகளை வரிசையில் வைத்திருந்தனா்.சமூக இடைவெளியை நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என காவலா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com