ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலை அடிவாரத்தில் கோயில்கள் உள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலை அடிவாரத்தில் கோயில்கள் உள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செண்பகத் தோப்பு மேற்கு தொடா்ச்சி மலை அருகே அமைந்துள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டுயானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் மற்றும் சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் காட்டழகா்கோயில், கருப்பசாமி கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில் மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு பக்தா்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வாா்கள். தற்போது கரோனா தொற்று காரணமாக இக்கோயில் பகுதிகளில் பக்தா்கள் நடமாட்டம் இல்லாததால் அடா்ந்த வனப்பகுதியில் வசித்து வந்த வன விலங்குகள் செண்பகத்தோப்பு அடிவாரப் பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. குறிப்பாக காட்டுயானைகள் அதிகமாக அப்பகுதியில் நடமாடுவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com