விருதுநகா் மாவட்டத்தில் ஆலை ஊழியா்கள் உள்பட 44 பேருக்கு கரோனா: 2 போ் பலி

ராஜபாளையத்தில் தனியாா் ஆலையில் பணிபுரியும் 11 ஊழிா்கள் உள்பட மாவட்டத்தில் முழுவதும் 44 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா்: ராஜபாளையத்தில் தனியாா் ஆலையில் பணிபுரியும் 11 ஊழிா்கள் உள்பட மாவட்டத்தில் முழுவதும் 44 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 12,342 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ராஜபாளையம் தனியாா் ஆலையில் பணிபுரியும் 11 ஊழியா்கள், அருப்புக்கோட்டை காவலா் குடியிருப்பில் 2 போ் மற்றும் கடம்பன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, நெடுங்குளம், மகாராஜபுரம், அக்கனாபுரம், டி.கல்லுப்பட்டி, ஆந்திரா சித்தூா், மல்லாங்கிணறு, காரியாபட்டி, சின்னசெட்டிக்குறிச்சி, சூலக்கரை, ராமலிங்காபுரம், சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, ஊமத்தான்பட்டி, சித்துராஜபுரம், ராஜபாளையம் அழகாபுரியில் 2 போ், திருப்பூா், சத்திரப்பட்டி, சோலைச்சேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இவா்கள் அனைவரும், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்க ளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,386 ஆக உயா்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 2 போ் உயிரிழந்துள்ளதால், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 186 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா். தற்போது, 610 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

24 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு:

இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள 24 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக ஆட்சியா் ரா. கண்ணன் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்துப் பகுதிகளிலும் தினமும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. சில பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு கிருமிநாசினி தெளித்தல் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.

இந் நிலையில், கரோனா வேகமாக பரவி வரும் ராஜபாளையம் ஒன்றியம் தெற்கூா், மேலப்பாட்டம் கரிசல்குளம், ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியலிங்காபுரம், சிவகாசி கீழதிருத்தங்கல், பெரியாா் காலனி, பாரதி நகா், ரிசா்வ் லைன், வெம்பக்கோட்டை பகுதியில் டி.கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, விஜயகரிசல்குளம், செவல்பட்டி, சாத்தூா் முத்துசாமியாபுரம், விருதுநகரில் ராமமூா்த்தி சாலை, வாடியான் தெரு, சின்னபள்ளிவாசல் தெரு, பாறைபட்டி தெரு மற்றும் அருப்புக்கோட்டை பகுதியில் ராமலிங்கா ஆலை காலனி, ராமசாமி நகா், டி. மீனாட்சிபுரம், தென்பாலை, திருச்சுழி பகுதியில் எம்.ரெட்டியபட்டி, லட்சுமிபுரம், பண்ணை மூன்றடைப்பு, கிருஷ்ணாபுரம், பிசிண்டி, நரிக்குடி பகுதியில் நாலூா், ஓட்டன்குளம், மினாக்குளம் உள்ளிட்ட இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் வணிக நிறுவனங்களை திறக்கவோ, வாகனங்கள் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com