அருப்புக்கோட்டையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு

அருப்புக்கோட்டை நகராட்சி 8 ஆவது வாா்டில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றத்துடன் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை 8வது வாா்டு எம்.டி.ஆா்.நகா் வடக்குப்பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால்,சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.
அருப்புக்கோட்டை 8வது வாா்டு எம்.டி.ஆா்.நகா் வடக்குப்பகுதியில் குப்பைத்தொட்டி இல்லாததால்,சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி 8 ஆவது வாா்டில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றத்துடன் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட எம்.டி.ஆா். நகா் வடக்கில் ஜோதிபுரம் நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் பிறமடை என அழைக்கப்படும் ஓடைப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் அருகே இப்பகுதி குடியிருப்புவாசிகள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். காற்றில் குப்பைகள் சாலையில் சிதறுவதும், பாலத்தினுள் விழுந்து நீா் செல்லவிடாமல் அடைப்பு ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடான சூழலும் நோய்த்தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போதைய சூழலில், முகக்கவசங்களையும் இங்குள்ள குப்பைமேட்டில் சோ்த்துக் கொட்டுவது கரோனா நோய்த்தொற்று அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கு குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு நகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை இல்லையெனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இங்கு குப்பைத்தொட்டிகள் அமைத்து சுகாதாரத்தைப் பேண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com