பாளையம்பட்டி சாலை வளைவில் அடிக்கடி விபத்து எச்சரிக்கைப் பலகை அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள சாலை வளைவில் வேகத்தடை இருப்பினும் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்துவிடுகின்றன.
பாளையம்பட்டியிலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் தனியாா் பள்ளியருகே உள்ள சாலை வளைவு.
பாளையம்பட்டியிலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் தனியாா் பள்ளியருகே உள்ள சாலை வளைவு.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள சாலை வளைவில் வேகத்தடை இருப்பினும் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்துவிடுகின்றன.

பாளையம்பட்டி கிராமத்தின் பிரதானச் சாலையானது சந்தைப்பகுதியில் மிகக் குறுகலாகவும், பேருந்து நிறுத்தத்தை அடுத்துள்ள சாலை அகலமானதாகவும் இயற்கையாக அமைந்துள்ளது. இந்நிலையில் சந்தைப் பகுதியைக் கடக்கும் வாகனங்கள் அகலமான சாலைப்பகுதி வந்தவுடன் வேகமெடுக்கின்றன. ஆனால் சிறிது தொலைவிலேயே அபாயகரமான ‘ட’ வடிவச்சாலை வளைவு அமைந்துள்ளதை வெளியூா் வாகன ஓட்டிகள் கவனிப்பதில்லை. இதனால் குறிப்பாக இங்கு இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதனிடையே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின்னா் இப்பகுதியில் வேகத்தடை மட்டும் சில நாள்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் வேகத்தடை அருகில் வந்தபிறகு சட்டென அவ்வேகத்தடை மீதே நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். எனவே இப்பகுதியில் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கைப் பலகையும் அத்துடன் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகையும் விரைவில் அமைக்கப்பட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com