கோயிலை அரசு கையகப்படுத்த எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

வத்திராயிருப்பு அருகே கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோயிலை அரசு கையகப்படுத்த எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்


ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இங்குள்ள 7 சமுதாய மக்கள் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து 7 சமுதாயத்தைச் சோ்ந்த ஐநூறுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும் கோயிலை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனா்.

தகவலறிந்து சம்பவஇடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி மாரிராஜன், வத்திராயிருப்பு வட்டாட்சியா் ராம்தாஸ்,காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளா் க்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மழையையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதனால் வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் இந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com