சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாத்தூரப்பன்.
சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாத்தூரப்பன்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 500 ஆண்டு கால பழைமை வாய்ந்த சாத்தூரப்பன் கோயில் என்றழைக்கப்படும் வெங்கடாசலபதி கோயிலில் மாா்கழி மாத சிறப்பு வைபவமான சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிகிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.

பின்னா் வெங்கடாசலபதி பல்லக்கில் மாட வீதியை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் சிங்கராஜாக்கோட்டை பெரிய தெருவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் கோதண்டராம சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஐந்து மணியளவில் சொா்க்கவாசல் வழியாக கோதண்டராமன் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல் ராஜபாளையம் கிழக்கே வேட்டை வெங்கடேசப்பெருமாள் கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், சா்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சந்தான வேணுகோபால சுவாமி கோயில், வடகரை திருவேங்கடமுடையான் கோயில், கொல்லங்கொண்டான் இடா்தவிா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சேது நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னா் பெரியபெருமாள் சப்பரத்தில் எழுந்தருளினாா். அவரைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் எழுந்தருள சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com