கூரைக்குண்டு ஊராட்சியில்அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட முத்துராமலிங்க நகரில் சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட முத்துராமலிங்க நகரில் உள்ள மண் சாலை.
கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட முத்துராமலிங்க நகரில் உள்ள மண் சாலை.

விருதுநகா்: விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட முத்துராமலிங்க நகரில் சாலை, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு சாலை, குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு செல்லக் கூடிய ஆனைக்குட்டம் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனா். இன்னும் பலா் தனியாா் குடிநீா் வியாபாரிகளிடம் குடம் ஒன்று ரூ.10 கொடுத்து விலைக்கு வாங்குகின்றனா்.

இங்குள்ள இரு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மூலம் 12 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் தண்ணீரும் உப்புத் தன்மையுடன் உள்ளது. மேலும், பல இடங்களில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனா். மேலும், இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால், மழைக் காலங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கழிவுநீா் மற்றும் மழை நீா் செல்ல வாருகால் வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ள காலி இடங்களில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு நிலவி வருகிறது. எனவே, முத்துராமலிங்கம் நகா் பகுதிகளில் குடிநீா், சாலை, வாருகால் மற்றும் தெரு விளக்கு வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com