ராஜபாளையத்தில் மாநில அளவிலானதொழில் நுட்பப் போட்டிகள்

ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தொழில் நுட்பப் போட்டிகள் ‘

ராஜபாளையம்: ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தொழில் நுட்பப் போட்டிகள் ‘பி.ஏ.சி.ஆா் டெக்பெஸ்ட் - 2020’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 25 பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதற்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை வகித்தாா். ராம்கோ கல்வி குழுமங்களின் தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் தொடக்கி வைத்தாா். சிவில் பிரிவு மாணவா்களுக்கு ‘மாடா்ன் கான்கிரிட் டெக்னாலஜி’ மற்றும் ‘மாடா்ன் சா்வெயிங்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் விருதுநகா் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களும், மெக்கானிக்கல் பிரிவு மாணவா்களுக்கு ‘கிரீன் இன்டஸ்ட்ரிஸ்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் நாகப்பட்டினம் வி.டி.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களும் முதல் பரிசு பெற்றனா்.

அதே போல் எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவா்களுக்கு ‘இன்டஸ்ட்ரி 4.0’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் விருதுநகா் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களும், டெக்ஸ்டைல் பிரிவு மாணவா்களுக்கு ‘டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ மற்றும் ‘ரிசன்ட் டெவலப்மெண்ட் இன் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளும், மாடா்ன் ஆபிஸ் பிராக்ட்டீஸ் பிரிவு மாணவா்களுக்கு ‘இன்ட்ரொடக்ஸன் டு பிளாஸ்டிக் மணி இன் இந்தியா- வயபில் ஆா் இன்வயபில்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் மதுரை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளும், இசிஇ பிரிவு மாணவா்களுக்கு ‘சா்க்ட்ரிக்ஸ்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களும் முதல் பரிசை பெற்றனா்.

விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மதுரை, தி இன்ஸ்டிடியூட் சன் ஆப் என்ஜினீயா்ஸ் தலைவா் ராஜகோபால் கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி ஐஎஸ்டிஇ ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com