6 நிமிடங்களில் 200 திருக்குறள் ஒப்பித்து சிவகாசி பள்ளி மாணவி உலக சாதனை

ஆறு நிமிடங்களில் 200 திருக்குறள்களை ஒப்பித்து, சிவகாசி பள்ளி மாணவி புதிய உலக சாதனை படைத்தாா்.
சிவகாசியில் திருக்குறள் ஒப்பித்து உலக சாதனை புரிந்த மாணவி கிருத்திகா ஹரிணிக்கு சான்றிதழை வழங்கும் ட்ரம்பத் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அலுவலா் முக்தாபிரதீப்.
சிவகாசியில் திருக்குறள் ஒப்பித்து உலக சாதனை புரிந்த மாணவி கிருத்திகா ஹரிணிக்கு சான்றிதழை வழங்கும் ட்ரம்பத் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அலுவலா் முக்தாபிரதீப்.

ஆறு நிமிடங்களில் 200 திருக்குறள்களை ஒப்பித்து, சிவகாசி பள்ளி மாணவி புதிய உலக சாதனை படைத்தாா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கிருத்திகா ஹரிணி (6). இவா் 6 நிமிடங்களில் 200 திருக்குறள்களை ஒப்பித்து சாதனை புரிவாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு சிவகாசியில் உள்ள ஜூனியா் அரிமா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் டி.பிராபாகரன், தொழிலதிபா்கள் ஏ.பி.செல்வராஜன் மற்றும் ஜி.அசோகன் ஆகியோா் முன்னிலையில் கிருத்திகா ஹரிணி, 200 திருக்குறள்களை 5 நிமிடங்கள் 49 வினாடியில் ஒப்பித்தாா். இதற்கு முன் இது போன்ற சாதனை நிகழ்த்தப்படவில்லை. ட்ரம்பத் உலக சாதனை அமைப்பின் தென் மண்டல தலைமை நடுவா் பி.எம்.சம்பத்குமாா் இதனைப் பதிவு செய்து புதிய உலக சாதனையாக அறிவித்தாா். தொடா்ந்து அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி முக்தாபிரதீப் உலக சாதனைக்கான சான்றிதழை மாணவிக்கு வழங்கினாா். சாதனை புரிந்த மாணவி கிருத்திகா ஹரிணியை அரிமா சங்கத்தலைவா் ஆா்.ராஜகோபால், செயலாளா் எஸ்.வாசப்பன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com