ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல் முறையாக அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல் முறையாக அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராஜபாளையம் தாலுகாவில் சேத்துாா் மற்றும் தேவதானம் பகுதிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜபாளையம் நகா்ப்பகுதியை சுற்றியுள்ள புதுக்குளம், பிரண்டகுளம், கடம்பன்குளம், புளியங்குளம், திருச்சாலூா், அளப்பசேரி, கருங்குளம், பெரிய குளம் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் இதனை சா்ந்துள்ள 1,200 ஏக்கருக்கும் அதிகமான பாசன பகுதிகளில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இவா்கள் 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சேத்தூா் கொள்முதல் நிலையத்திற்கு தங்கள் நெல்லினை கொண்டு செல்ல வழியின்றி வியாபாரிகளிடமே குறைந்த விலைக்கு விற்பனைக்கு செய்து வந்தனா். இந்நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ராஜபாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரராஜா கூறியது: விவசாயிகளின் தொடா் முயற்சியால் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியாா் பேருந்து நிறுவனம் அருகில் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பகுதியில் உள்ள நெல் விவசாயிகள் இதனை பயன்படுத்தி பலன் பெறலாம். மேலும், ஒரு நாளில் குறிப்பிட்ட அளவு தான் என்ற வரைமுறை இல்லாமல் கொண்டு வரும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com