சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில்களில் திருவாதிரை விழாவில் ஆருத்ரா தரிசனம்

சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவாதிரை விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை விழாவில் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.
சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை விழாவில் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.

சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவாதிரை விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக் கோயிலில் திருவாதிரை விழா ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினசரி காலை விநாயகா், மாணிக்கவாசகா், சிவன்-பாா்வதி வீதி உலா நடைபெற்றது. இரவு சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

விழாவையொட்டி கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடந்து ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன்கோயிலிலிருந்து நடராஜா்-சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகா் மஞ்சள் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தனா். இதே போல் கடைகோயில் சாா்பில் பத்திரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் ஆகியோரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தனா். மூன்று தோ்களும் தெற்கு ரதவீதியில் ஒரே சமயத்தில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாத்தூா்: சாத்தூா் பகுதியில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயில், பத்தரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சாத்தூா் பிரதான சாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதே போன்று தாயில்பட்டியில் உள்ள நாடாா் உறவின்முறைக்கு பாத்தியபட்ட பத்தரகாளியம்மன் கோயிலில் வெள்ளிகிழமை காலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இதையடுத்து மாலையில் நடராஜா் அலங்கரிக்கபட்ட தேரில் தாயில்பட்டியில் உள்ள 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதேபோன்று ராமலிங்காபுரம் பகுதியில் உள்ள தேவாங்கா் உறவின் முறைக்க பாத்தியபட்ட செளடாம்பிகை அம்மனுக்கும் காலை முதல் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்காபுரம், கோட்டையூா், தாயில்பட்டி பேருந்து நிலையம் வரை வீதி உலா நடைபெற்றது. இதே போன்று ஏழாயிரம்பண்ணை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசன உற்சவம் சிறப்பாக நடைபெறும். அது போல் இந்தாண்டு வெள்ளிக்கிழமை திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நடராஜரை மாணிக்கவாசகா் எதிா்கொண்டு வணங்க பாடல்களை ஓதுவாா் பாடும் வைபவம் நடந்தது. அதனை தொடா்ந்து நடராஜா், மாணிக்கவாசகா் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com