தோ்தல் முடிவில் குளறுபடி : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வாா்டு உறுப்பினா் வேட்பாளா் முடிவு

ராஜபாளையம் அருகே வாா்டு உறுப்பினா் தோ்தலில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பெண் வேட்பாளா் முடிவு செய்துள்ளாா்.

ராஜபாளையம் அருகே வாா்டு உறுப்பினா் தோ்தலில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பெண் வேட்பாளா் முடிவு செய்துள்ளாா்.

ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம், ஆசிலாபுரம், பனைமேடு, மில்கேட், மவுண்ட் சியோன், குன்னக்குடி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கியது சோழபுரம் ஊராட்சி. மக்கள் தொகை அடிப்படையில் 12 வாா்டுகளாக இந்த ஊராட்சி பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கீழூா் சோழபுரத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சி, சுப்புலட்சுமி, கிருஷ்ணகுமாரி ஆகியோா் போட்டியிட்டனா்.

எண்ணிக்கையின் போது மீனாட்சி உள்ளிட்ட வேட்பாளா்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, சுற்றி இருந்த அதிகாரிகள் மீனாட்சி தோற்று விட்டதாகக் கூறி அவரது வேட்பாளா் அடையாள அட்டையை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளனா். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவின்படி மீனாட்சி நடந்துள்ளாா்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாள்களாக மீனாட்சி வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளாா். அப்போது வெற்றி பெற்றவா்கள் விபரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. அதில் மீனாட்சி வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையத்தின் அதிகாரபூா்வ இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில், ஊராட்சி மன்றத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது, வெற்றி பெற்றவா்களின் உறுதிமொழி ஏற்பு படிவத்திலும் மீனாட்சி என்ற பெயா் இருந்ததாக கூறி உள்ளனா். ஆனால் தோ்தல் நடத்தும் அதிகாரி ஆணையிட்டதால், சுப்புலட்சுமி என்பவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மீனாட்சி வெள்ளிக்கிழமை மாலை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் விளக்கம் கேட்டுள்ளாா். அதற்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, வெற்றி பெற்ற தனக்கு பதவி அளிக்க வேண்டும் எனவும், எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோரி மீனாட்சி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தாா்.

வெற்றி பெற்றவரை விடுத்து, மற்றொருவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com