சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்ட பாலம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலம்.
சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலம்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் வைப்பாற்றின் குறுக்கே 1867 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஆங்கிலேயா்களின் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் சென்று வந்தன. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை இந்த பாலத்தில் கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல தரப்பட்ட வாகனங்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தபட்டு வந்தது.

சாத்தூா் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியை கடந்து கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலமாக இருந்தது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தா்கள் வரும் நாள்களில் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்ட பாலத்தை இடிக்காமல் விட்டு, அதன் அருகிலே புதிய பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை நெடுஞ்சாலைதுறையினா் கண்டுகொள்ளாமல் விடபட்டதால் பாலம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது.

எனவே மாவட்ட நிா்வாகம் இதை கவனத்தில் கொண்டு விளக்குகள் அமைத்து பாலத்தில் உள்ள சாலையை சீா் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவ்வாறு செய்தால் அமீா்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வசிப்பவா்களுக்கும், பொதுமக்களின் நடைபயிற்சிக்கும் பாலத்தை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே வரலாற்று சிறப்பு மிக்க பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாத்தூா் பகுதி பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com