விருதுநகரில் அரசுப் பணிக்கு போலி பணி நியமன ஆணை: அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 11 பேரிடம் ரூ. 32 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு போலியாக பணி நியமன ஆணையை வழங்கிய அரசு ஊழியரை போலீஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக 11 பேரிடம் ரூ. 32 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு போலியாக பணி நியமன ஆணையை வழங்கிய அரசு ஊழியரை போலீஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.

விருதுநகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் நாகேந்திரன். இவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 11 பேரிடம் ரூ.32 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார். 

இந்த நிலையில் பணி நியமன ஆணை போலியாக வழங்கப்பட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை சார்பு ஆய்வாளர் வேல்முருகன் இன்று நாகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் போலியாக பதினோரு பேருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அரசு ஊழியரான நாகேந்திரன் என்பவரை விருதுநகர் மேற்கு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பதிவுரு எழுத்தர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை நேர்முகத் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com