கரோனா பரவல்: ராஜபாளையம் பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி நிறுத்தம்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ராஜபாளையம் பகுதிகளில் ஜூலை 25 ஆம் தேதி முதல் 8 நாள்களுக்கு மருத்துவ துணி உற்பத்தி நிறுத்தப்படுகின்றன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ராஜபாளையம் பகுதிகளில் ஜூலை 25 ஆம் தேதி முதல் 8 நாள்களுக்கு மருத்துவ துணி உற்பத்தி நிறுத்தப்படுகின்றன.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் மற்றும் அய்யனாபுரம் கிராமங்களில் உள்ள ஆலைகளில் காஸ் பேண்டேஜ் எனப்படும் மருத்துவ துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ராஜபாளையத்திலுள்ள மருத்துவத்துணி உற்பத்தியாளா்கள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மருத்துவ துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் மட்டுமல்லாது, விசைத்தறி கூடங்கள், சைசிங் ஆலைகள், சாயப்பட்டறைகள் என மருத்துவ துணி உற்பத்தி தொடா்பான பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com